செய்திகள்
ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மருந்து

இந்தியாவில் ஆண்டுக்கு 10 கோடி டோஸ் ஸ்புட்னிக் மருந்து தயாரிக்கப்படும் -ரஷியா அறிவிப்பு

Published On 2020-11-28 08:04 GMT   |   Update On 2020-11-28 08:04 GMT
இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷியா அறிவித்து உள்ளது.
ஸ்கோ:

இந்தியாவுடன் இணைந்து அடுத்த வருட தொடக்கத்தில் ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி மருந்து உற்பத்தி செய்யப்படும் என ரஷியா கூறி உள்ளது. இந்தியாவின் ஹெட்டிரோ மருந்து தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து ஆண்டுக்கு ஸ்புட்னிக் மருந்தின் 10 கோடி டோஸ்கள் உற்பத்தி செய்யப்படும் என ரஷியாவின் நேரடி முதலீட்டு நிதியம் அறிவித்துள்ளது. 

இந்தியாவில் தற்போது பரிசோதனையில் இருக்கும் இந்த தடுப்பு மருந்து 95 சதவீதம் செயல்திறன் கொண்டிருப்பதாகவும் ரஷியா தெரிவித்து உள்ளது.

சர்வதேச சந்தைகளில் ஸ்பூட்னிக்-வி தடுப்பூசி ஒரு டோஸ்-க்கு 10 டாலர் என விலை நிர்ணயிக்கப்படும் என்றும், இது பதிவுசெய்யப்பட்ட வேறு சில தடுப்பூசிகளைக் காட்டிலும் விலை குறைவு என்றும் ரஷியா கூறி உள்ளது.
Tags:    

Similar News