செய்திகள்
சவுமியா அன்புமணி

பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி விழிப்புணர்வு பிரசாரம்- சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்

Published On 2019-11-16 10:16 GMT   |   Update On 2019-11-16 10:16 GMT
பசுமைத்தாயகம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி நூதன விழிப்புணர்வு பிரசாரத்தை சவுமியா அன்புமணி சென்னையில் தொடங்கி வைத்தார்.

சென்னை:

பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க பல்வேறு முயற்சிகளை அரசும், சமூக அமைப்புகளும் மேற்கொண்டு வருகின்றன.

பசுமைத்தாயகம் அமைப்பு பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி நூதனமான விழிப்புணர்வு பிரசாரத்தை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது.

சென்னையில் இன்று சைதாப்பேட்டை அண்ணாநகர், ஆர்.கே.நகர், மயிலாப்பூர் ஆகிய 4 இடங்களில் நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை பசுமை தாயகம் தலைவர் சவுமியா அன்புமணி தொடங்கி வைத்தார்.

2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை கொடுப்பவர்களுக்கு ஒரு கிலோ அரிசி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, மாநில செயலாளர் அருள், இணை செயலாளர் எஸ்.கே. சங்கர், ஜெயராமன் சந்தானம், ஆலோசகர்கள் ராதா கிருஷ்ணன், இரா. சகாதேவன், முஸ்தபா, மாவட்ட தலைவர் அடையாறு வடிவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 


சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான முயற்சியாக இந்த பிரசாரத்தை செய்கிறோம். பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. பொது மக்களிடம் எடுத்துக் கூறியதும் புரிந்து கொள்கிறார்கள்.

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் என்பது நமது கலாச்சாரத்தில் உள்ளதல்ல. பூ கட்டும் நாரை கூட பத்திரப்படுத்தி தான் வைப்போம். துணி, பைகள் பாத்திரங்களைத்தான் பயன்படுத்தி வந்தோம். 50 ஆண்டுகளுக்குள் தான் இந்த கலாச்சாரம் நம்மை பற்றிக்கொண்டது.

குப்பையாக தூக்கி எறியும் பிளாஸ்டிக் குப்பைகளால் மனித குலம் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க உள்ளது. இதை மக்கள் உணர தொடங்கி இருக்கிறார்கள். விரைவில் ஒழித்து விட முடியும்.

எல்லோரும் இதை ஒரு இயக்கமாக முன்னெடுக்க வேண்டும். ரேசன் கடைகளில் கூட பிளாஸ்டிக் கழிவுகளுக்கு அரிசி வழங்கி விழிப்புணர்வை ஊட்டலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News