செய்திகள்
மாலதி

லாரியில் மோதி கார் கவிழ்ந்தது- பெண் போலீஸ் ஏட்டு பலி

Published On 2021-04-05 10:09 GMT   |   Update On 2021-04-05 10:09 GMT
கே.வி.குப்பம் அருகே லாரியில் மோதி கார் கவிழ்ந்த விபத்தில் பறக்கும் படை தேர்தல் பணியில் இருந்த பெண் போலீஸ் ஏட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.

கே.வி.குப்பம்:

வேலூர் விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் மாலதி (வயது 45). இவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் தலைமை பெண் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வந்தார்.

மாலதி கே.வி.குப்பம் தொகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். நேற்றிரவு கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் அருகே மாலதி மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரி மீது மோதியது.

கார் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி தலைமை பெண் போலீஸ் ஏட்டு மாலதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வீடியோ கிராபர் மற்றும் டிரைவர் படுகாயம் அடைந்தனர்.

இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தலைமை பெண் போலீஸ் ஏட்டு மாலதியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

Similar News