செய்திகள்
விஜய் பிரபாகரன்

விஜய் பிரபாகரன் 17-ந்தேதி கோவை வருகை

Published On 2019-11-12 16:30 GMT   |   Update On 2019-11-12 16:30 GMT
புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா 17-ந் தேதி கோவையில் நடக்கிறது. இதில் விஜய் பிரபாகரன் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

வடவள்ளி:

தே.மு.தி.க. கோவை மாநகர் மேற்கு மாவட்டத்தின் புதிய அலுவலக கட்டிடம் திறப்பு விழா மற்றும் 500 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 17-ந் தேதி நடக்கிறது. இதில் விஜயகாந்தின் மகன் விஜய்பிரபாகரன் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இது குறித்தான ஆலோசனை கூட்டம் கோவை மாநகர் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.முருகன் தலைமையில் கோவை வடவள்ளியில் நடைப்பெற்றது. கூட்டத்தில் விஜய பிரபாகரனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது. கட்சி அலுவலகம் திறக்க இருக்கும் நாளில் காலை வடவள்ளி பேருந்து முனையம், ஆலமரம் பஸ் நிறுத்தம், கட்சி அலுவலகம் உள்ளிட்ட 3 இடங்களில் கட்சிகொடி ஏற்றுவது என்றும் உள்ளாட்சித் தேர்தலில் எவ்வாறு வேலை செய்ய வேண்டும் என்பது குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எனவே வரும் கட்சி அலுவலகம் திறப்பு விழாவிற்கு மாவட்ட நிர்வாகிகள், பொதுக்குழு உறுப் பினர்கள் பகுதிசெயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், கேப்டன் மன்றசெயலாளாளர்கள், இளைஞரணி செயலாளர்கள், தொண்டரணி செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தில் துணைச்செயலாளர்கள் சண்முகவடிவு, கணுவாய் ராஜன் , பாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வலிங்கம், பகுதிசெய லாளார்கள் சிவராமன், ஆறுச்சாமி, லக்கிகுட்டி, காளப்பட்டி பாபு, ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் கோபிக்கண்ணு, வீராச்சாமி, இளங்கோ, கேப்டன் மன்ற செயலாளர் காலனிராஜா, இளைஞரணி செயலாளர் விஜயகுமார், தொண்டரணி செயாலாளர் கவி உள்ளிட்ட கார்த்தி பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News