தொழில்நுட்பம்
போன் கேமரா - கோப்புப்படம்

இந்த செயலி மொபைல் கேமரா கொண்டு அதை கணிப்பதாக வைரலாகும் பகீர் தகவல்

Published On 2020-07-31 04:19 GMT   |   Update On 2020-07-31 04:19 GMT
மொபைல் செயலி ஒன்று ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவை கொண்டு அதை சரியாக கணிப்பதாக பகீர் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவலில், பீடோமீட்டர் 2018 எனும் மொபைல் செயலி ரத்தத்தில் உள்ள காற்றின் அளவினை மொபைல் போன் கேமரா மூலம் சரியாக கணிக்கும் என கூறப்படுகிறது. இதற்கு மொபைல் போனின் பின்புற கேமராவின் மேல் சுண்டு விரல் வைத்தாலே போதும் என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வைரல் தகவல்களுடன் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து செயலியை எவ்வாறு இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய இணைய முகவரியும் இணைக்கப்பட்டு இருக்கிறது. பல்ஸ் ஆக்சிமீட்டர் என்பது இரத்தத்தில் உள்ள காற்றின் அளவை கணக்கிடும் சிறு சாதனம் ஆகும். 

இது பொதுவாக சுவாச பிரச்சை உள்ள நோயாளிகளை பரிசோதனை செய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம் இது கொரோனா வைரஸ் பாதிப்புக்கான அறிகுறிகளில் ஒன்றை கண்டறிய ஆக்சிமீட்டர் பயன்படுவதால், தற்சமயம் இது அதிக பிரபலமாகி வருகிறது. 

மேலும் இந்த செயலியின் பெயர் பீடோமீட்டர் ஆகும். இது பயனர் நடக்கும் போது ஒவ்வொரு அடியையும் துல்லியமாக கணக்கிடுகிறது. வைரல் தகவல்களில் பயனர்கள் தங்களது சுண்டு விரல் கொண்டு கேமராவை முழுமையாக மறைத்துக் கொண்டு திரையில் வரும் மெஷர் எனும் ஐகானை க்ளிக் செய்தால், ரத்தத்தில் உள்ள காற்றின் அளவு விவரங்கள் திரையில் தெரியும் என குறிப்பிடப்பட்டு உள்ளது.



வைரல் பதிவுகளை ஆய்வு செய்ததில், தற்போதைய தொழில்நுட்பத்தை கொண்டு மொபைல் போன் மட்டும் பயன்படுத்தி ஒருவர் உடலின் இரத்தத்தில் உள்ள காற்றின் அளவை கணக்கிட முடியாது என தெரியவந்துள்ளது. வைரல் தகவலில் உள்ள செயலியும் ரத்தத்தின் காற்றோட்ட அளவை கண்டறியவில்லை. 

அந்த வகையில் வைரல் தகவல்களில் உள்ளது போன்று மொபைல் போன் கேமரா மற்றும் செயலியை கொண்டு ரத்தத்தின் காற்றோட்ட அளவுகளை கணக்கிட முடியும் என்ற தகவலில் துளியும் உண்மையில்லை என்பது உறுதியாகி விட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
Tags:    

Similar News