தொழில்நுட்பம்

நோக்கியா 5.1 பிளஸ் வெளியீட்டு தேதி அறிவிப்பு

Published On 2018-09-21 05:42 GMT   |   Update On 2018-09-21 05:42 GMT
ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போனின் விற்பனை தேதியை அறிவித்துள்ளது. #Nokia5Plus



ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் நோக்கியா 5.1 பிளஸ் மற்றும் நோக்கியா 6.1 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இவற்றின் விற்பனை செப்டம்பரில் துவங்கும் என ஹெச்.எம்.டி. தெரிவித்திருந்த நிலையில், இதன் விற்பனை தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் செப்டம்பர் 24-ம் தேதி முதல் விற்பனை துவங்கும் என தெரிவித்துள்ளது. 

நோக்கியா 5.1 பிளஸ் ஆன்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போனில் 5.86 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 19:9 டிஸ்ப்ளே, 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட், 3 ஜிபி ரேம், ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ ஓ.எஸ். வழங்கப்பட்டுள்ளது.

புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் 8 எம்பி செல்ஃபி கேமரா, ஏ.ஐ. அம்சங்கள் மற்றும் பியூட்டி மோட் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. கிளாஸ் பேக், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டுள்ள புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.



நோக்கியா 5.1 பிளஸ் சிறப்பம்சங்கள்:

- 5.86 இன்ச் 720x1520 பிக்சல் HD பிளஸ், 2.5D வளைந்த கிளாஸ், 19:9 ரக டிஸ்ப்ளே
- ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ P60 12nm சிப்செட்
- மாலி-G72 MP3 GPU
- 3 ஜிபி ரேம்
- 32 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- ஆன்ட்ராய்டு 8.1 ஓரியோ
- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0, PDAF
- 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
- 8 எம்பி செல்ஃபி கேமரா, f/2.2
- கைரேகை சென்சார்
- 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக், எஃப்.எம். ரேடியோ
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி
- 3060 எம்.ஏ.ஹெச். பேட்டரி

நோக்கியா 5.1 பிளஸ் ஸ்மார்ட்போன் பிளாக், வைட் மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், செப்டம்பர் 24-ம் தேதி மதியம் 2.00 மணிக்கு இதன் விலை தெரியவரும்.
Tags:    

Similar News