ஆன்மிகம்
குரு பகவான்

குரு பகவான் பற்றிய தகவல்கள்

Published On 2019-10-17 08:28 GMT   |   Update On 2019-10-17 08:28 GMT
மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு.
நவக்கிரகங்களில் முழுமையான சுப கிரகமாக திகழ்பவர், குரு பகவான். இவர் மனித வாழ்விற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் தருபவர் என்பதால், எந்த கிரகத்திற்கும் இல்லாத தனிச் சிறப்பு குருவிற்கும், குருவின் பார்வைக்கும் உண்டு. ஒரு ஜாதகத்தில் எத்தனை தோஷங்கள் இருந்தாலும், குரு பார்வை இருந்தால் கெடுபலன்கள் குறைந்து நற்பலன்கள் மிகும்.

எனவேதான் ஜோதிட சாஸ்திரம் ‘குரு பார்க்க கோடி நன்மை’ என்று கூறுகிறது. குரு இருக்கும் இடத்தை வைத்து ஒரு ஜாதகத்தில் குழந்தைகளின் நிலையை அறியமுடியும் என்பதால், இவர் ‘புத்திர காரகன்’ என்றும் அழைக்கப்படுகிறார். மனிதனின் அனைத்து தேவைகளையும் நிறைவு செய்யும் பணத்திற்கு அதிபதி என்பதால் ‘தன காரகன்’ என்றும் போற்றப்படுகிறார். குருவிற்கு ‘ஜீவன காரகன்’ என்ற பெயரும் உண்டு.

நிறம் - மஞ்சள்

குணம் - சாத்வீகம்

மலர் - முல்லை

ரத்தினம் - புஷ்பராகம்

சமித்து - அரசு

தேவதை - இந்திரன்

பிரத்யதி தேவதை - நான்முகன்

திசை - வடக்கு

ஆசன வடிவம் - செவ்வகம்

வாகனம் - யானை

தானியம் - கொண்டைக்கடலை

உலோகம் - பொன்

சுவை - இனிப்பு

ராகம் - அடானா

நட்பு - சூரியன், சந்திரன், செவ்வாய்

பகை - புதன், சுக்ரன்

சமம் - சனி, ராகு, கேது

ஆட்சி - தனுசு, மீனம்

மூலத்திரிகோணம் - தனுசு

உச்சம் - கடகம்

நீச்சம் - மகரம்

நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

தசா காலம் - 16 வருடங்கள்

பார்வை - 5, 7, 9-ம் இடங்கள்

பாலினம் - ஆண்

கோச்சார காலம் - 1 வருடம்

உருவம் - உயரம்

உபகிரகம் - எமகண்டன்
Tags:    

Similar News