தொழில்நுட்பம்
டெலிகிராம்

வாட்ஸ்அப் சர்வெர் டவுன் பிரச்சினையால் டெலிகிராமிற்கு அடித்த ஜாக்பாட்

Published On 2021-10-07 06:58 GMT   |   Update On 2021-10-07 06:58 GMT
வாட்ஸ்அப் செயலி இயங்காமல் போன சில மணி நேரங்களில் டெலிகிராம் செயலி கோடிக்கணக்கில் புது பயனர்களை பெற்று இருக்கிறது.


பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகள் உலகம் முழுக்க சுமார் 6 மணி நேரம் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பு காரணமாக பேஸ்புக் பல ஆயிரம் கோடி இழப்பை சந்தித்தது. பேஸ்புக் சேவைகள் முடங்கிய சில மணி நேரங்களில் வாட்ஸ்அப் செயலிக்கு போட்டியாளராக இருக்கும் டெலிகிராம் புதிய பயனர்கள் எண்ணிக்கையில் திடீர் வளர்ச்சியை பதிவு செய்தது. 

வாட்ஸ்அப் இயங்காத காரணத்தால், டெலிகிராம் செயலியை பலர் இன்ஸ்டால் செய்ய துவங்கினர். இதன் காரணமாக சில மணி நேரங்களில் டெலிகிராம் சேவையில் சுமார் 7 கோடி பேர் புதிதாக இணைந்தனர். 



மிக குறுகிய காலக்கட்டத்தில் அதிக பயனர்கள் இன்ஸ்டால் செய்த போதும், டெலிகிராம் புதிய பயனர்களால் ஏற்பட்ட திடீர் நெரிசலையும் கச்சிதமாக கையாண்டது என டெலிகிராம் நிறுவனர் பவேல் டுரோவ் தெரிவித்தார். அமெரிக்காவில் மட்டும் செயலி இன்ஸ்டால் ஆக சற்று நேரம் ஆனது.

Tags:    

Similar News