செய்திகள்
மாரத்தான் ஓட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கலந்துெகாண்டு ஓடியபோது எடுத்த படம்.

சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி மாரத்தான் ஓட்டம் - அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

Published On 2019-11-21 17:59 GMT   |   Update On 2019-11-21 17:59 GMT
சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி நடைபெற்ற மாரத்தான் ஓட்டத்தில் அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் பங்கேற்றார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டி பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்ற மாரத்தான் ஓட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூரில் நேற்று நடைபெற்றது. தா.பழூர் கடைவீதியில் தொடங்கிய இந்த மாரத்தான் ஓட்டத்தை அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் மாரத்தானில் தானும் கலந்து கொண்டு ஓடி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறுகையில், கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உடல்நலம் மற்றும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியம் குறித்து இந்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், வாகன ஓட்டிகள் மற்றும் மாணவ-மாணவிகள் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றார்.

இதில், ஜெயங்கொண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், தா.பழூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சமூக ஆர்வலர் தனஞ்ஜெயன், ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியை கமலம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தா.பழூர் போலீசார் மற்றும் உடற்பயிற்சி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்வழங்கப்பட்டது.
Tags:    

Similar News