லைஃப்ஸ்டைல்
தினை வெஜிடபிள் கொழுக்கட்டை

சத்தான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை

Published On 2021-11-08 05:41 GMT   |   Update On 2021-11-08 05:41 GMT
சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று தினை வைத்து கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

தினை அரிசி - 1 கப்
வெங்காயம் - 1
கேரட்  - 1
ப.மிளகாய் - 2
தேங்காய் - 1 துண்டு
கடுகு - 1 தேக்கரண்டி
உளுந்து - 2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 1 கைப்பிடி
கொத்தமல்லி - 2 கைப்பிடி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

தேங்காய், கேரட்டை துருவிக்கொள்ளவும்.

வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

தினை அரிசியை 1 மணி நேரம் ஊறவைத்த பின்னர் நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்..

ஓரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய், கேரட், தேங்காய் துருவல், கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்..

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்..

காய்கறிகள் நன்றாக வதங்கியதும் அரைத்த அரிசி மாவை ஊற்றி கிளறவும்.

மாவு நன்கு வெந்து சுருண்டு வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி கொழுக்கட்டைகளாக பிடித்து இட்லி சட்டியில் 15 வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

சூப்பரான தினை வெஜிடபிள் கொழுக்கட்டை ரெடி.

Tags:    

Similar News