லைஃப்ஸ்டைல்
கோதுமை தோசை

உடல் எடையை குறைக்கும் கோதுமை தோசை

Published On 2019-10-11 04:34 GMT   |   Update On 2019-10-11 04:34 GMT
டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு கோதுமை சிறந்த உணவாகும். இன்று கோதுமை மாவில் தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
நீர்த்த மோர் - 1 டம்ளர்
எண்ணெய் - தேவையான அளவு



செய்முறை :

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கலந்த பின்னர் நீர்த்த நீர்க்க கரைத்துக்கொள்ள வேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து லேசாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.

கோதுமை தோசை வேக கூடுதல் நேரமாகும், கவனமாக வார்க்கவும்.

கோதுமை தோசை ரெடி, தொட்டுக்கொள்ள புதினா சட்னி, தேங்காய் சட்னி, பொடித்த வெல்லம் நல்ல சுவை தரும்.

சுவையான கோதுமை தோசை ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News