செய்திகள்
கோப்புபடம்

கூட்டுறவு கடனுக்கான வட்டி தள்ளுபடி - பொதுமக்கள் வேண்டுகோள்

Published On 2021-10-25 04:53 GMT   |   Update On 2021-10-25 04:53 GMT
அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக நகைக்கடன் பெற்றிருந்த பொதுமக்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை.
திருப்பூர்:

தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் பெற்ற 5 பவுனுக்கு குறைவான நகைக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது. அது தொடர்பாக, மேலாய்வு நடந்து முடிந்துள்ள நிலையில்  கடன் தள்ளுபடி குறித்த விவரம் முழுமையாக வெளியாகவில்லை.

இருப்பினும் கூட்டுறவு சங்கங்களில் இருந்து நகைக்கடன் பெற்ற உறுப்பினரை தொடர்பு கொண்டு கடன் தள்ளுபடி இல்லை. வட்டியை செலுத்துங்கள் என்று மட்டும் அறிவிப்பு செய்து வருகின்றனர்.

அரசின் பல்வேறு விதிமுறைகள் காரணமாக நகைக்கடன் பெற்றிருந்த பொதுமக்களுக்கு தள்ளுபடி சலுகை கிடைக்கவில்லை. இதுபோன்ற தள்ளுபடி சலுகை பெறாத உறுப்பினர்களுக்கு மட்டும் வட்டியை செலுத்த வேண்டுமென அறிவிப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கூறுகையில்:

தமிழக அரசு அறிவித்தபடி, நகைக்கடன் தள்ளுபடி செய்யவில்லை. பல்வேறு காரணங்களை காட்டி பெரும்பாலான கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இதுவரை கடன் தள்ளுபடியாகும் என எதிர்பார்த்த பொதுமக்கள் திடீரென  ஒரு ஆண்டுக்கான வட்டியை சேர்த்து செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே தள்ளுபடி பெறாத உறுப்பினருக்கு வட்டியாவது தள்ளுபடி செய்ய வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News