செய்திகள்
கோல் அடித்த மகிழ்ச்சியில் நெதர்லாந்து வீர்ர்கள்

யூரோ கோப்பை - ஆஸ்திரியாவை வீழ்த்தி நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது நெதர்லாந்து

Published On 2021-06-17 22:52 GMT   |   Update On 2021-06-17 22:52 GMT
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டங்களில் இத்தாலி, உக்ரைன் மற்றும் பெல்ஜியம் அணிகள் வெற்றி பெற்றன.
யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய அதிகாலை ஆட்டத்தில் குரூப் சி பிரிவில் நெதர்லாந்து, ஆஸ்திரியா அணிகள் மோதின.

முதல் பாதியின் 11வது நிமிடத்தில் நெதர்லாந்து வீரர் மெம்பிஸ் டெபே முதல் கோலை அடித்தார். இதனால் முதல் பாதியின் முடிவில் 1-0 என நெதர்லாந்து முன்னிலை வகித்தது.

ஆட்டத்தின் இரண்டாவது பாதியின் 67வது நிமிடத்தில் நெதர்லாந்து அணியின் டென்சல் டம்டிரிஸ் ஒரு கோல் அடித்தார்.

இறுதியில், நெதர்லாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் நாக் அவுட் சுற்றுக்கும் முன்னேறியது.
Tags:    

Similar News