செய்திகள்
காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்

விருதுநகரில் காமராஜர் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் எடப்பாடி பழனிசாமி

Published On 2019-07-15 04:25 GMT   |   Update On 2019-07-15 04:25 GMT
விருதுநகரில் சரத்குமார் கட்டிய காமராஜர் மணிமண்டபத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்துவைத்தார்.
சென்னை:

கர்மவீரர் காமராஜரின் புகழ், அவருடைய சாதனைகள் மற்றும் மக்கள் நலத்திட்டங்களை எதிர்கால சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் விருதுநகரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமாரின் முயற்சி, உழைப்பால் கட்டப்பட்டுள்ள இந்த மணி மண்டபத்தின் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது.

மணிமண்டபத்தை தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். தலைமைச் செயலகத்தில் நடந்த விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், ராதிகா சரத்குமார், வரலட்சுமி மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

விருதுநகர் விழாவில் சரத்குமார், பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

மதுரை- நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடியில் அமைந்துள்ள இந்த மணிமண்டபம், 12 ஏக்கர் பரப்பளவில் 25 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News