செய்திகள்
ராகுல் காந்தி

விவாதம் நடத்த மத்திய அரசு பயப்படுகிறது -ராகுல் காந்தி

Published On 2021-11-29 09:58 GMT   |   Update On 2021-11-29 12:55 GMT
விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்று ராகுல் காந்தி கூறினார்.
புதுடெல்லி:

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல் நாளில், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் இதை ஏற்க சபாநாயகர் மறுத்து விட்டார். இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோ‌ஷமிட்டனர். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. விவாதம் இன்றி மசோதா நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்றிருக்க வேண்டும், விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது என்றும் அவர் கூறினார். 3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும் என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
Tags:    

Similar News