ஆன்மிகம்
ஆதிபராசக்தி அம்மன்

பெங்களூரு: ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் பச்சை பூக்கரக ஊர்வலம்

Published On 2021-08-13 08:03 GMT   |   Update On 2021-08-13 08:03 GMT
பெங்களூரு ஜீவன்பீமாநகரில் உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் வருகிற 20-ந் தேதி பச்சை பூக்கரக ஊர்வலம் நடக்க உள்ளது.
பெங்களூரு ஜீவன்பீமாநகர் பஸ் நிலையம் அருகே உள்ள ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் 38-வது ஆண்டு விழா மற்றும் 29-வது ஆண்டு இலவச திருமண விழா பச்சை பூக்கரகம், தேரோட்டம் நாளை(சனிக்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

நாளை(சனிக்கிழமை) இரவு 8 மணிக்கு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை பூஜை நடக்கிறது. 15-ந் தேதி காலை 9 மணிக்கு பால்குட ஊர்வலம் மற்றும் பால் அபிஷேகம் நடக்கிறது. 17-ந் தேதி காலை 9 மணிக்கு கஞ்சி கலய ஊர்வலம் மற்றும் கஞ்சி வார்த்தல் நடைபெறுகிறது.

19-ந்தேதி காலை 6-ம் ஆண்டு ஸ்ரீசிரடி சாய்பாபாவுக்கு விசேஷ பூஜை நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு அய்யப்பன் பஜனை குழுவால் ஸ்ரீசாய் பஜனை நடக்க உள்ளது. 20-ந் தேதி மாலை 6 மணிக்கு பிரதான வீதிகளில் அன்னையின் பச்சை பூக்கரக ஊர்வலம் நடக்க உள்ளது.

22-ந் தேதி காலை 6.30 மணிக்கு அன்னையின் கலச விளக்கு வேள்வி பூஜையும், காலை 10 மணிக்கு இலவச திருமண விழாவும், காலை 11 மணிக்கு அன்னையின் தேர் பவனி ஊர்வலமும் நடக்கிறது.
Tags:    

Similar News