ஆட்டோமொபைல்
மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் டீசர்

புதிய பென்ஸ் எஸ் கிளாஸ் வரைபடம் வெளியீடு

Published On 2020-08-28 09:08 GMT   |   Update On 2020-08-28 09:08 GMT
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடலுக்கான வரைபடம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய எஸ் கிளாஸ் மாடல் வரைபடங்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. டபிள்யூ223 என அழைக்கப்படும் புதிய எஸ் கிளாஸ் முற்றிலும் புதிய வடிவமைப்பை கொண்டிருக்கிறது. எனினும், வரைபடங்களின் படி புதிய கார் பெரும்பாலான அம்சங்கள் முந்தைய மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

புதிய மாடலில் பெரிய கிரில், லோவர் பம்ப்பரில் ஏர் இன்டேக் வழங்கப்படுகிறது. இத்துடன் ஹெட்லேம்ப் வடிவம் ப்ரோடோடைப் மாடலில் இருந்த அளவு மெல்லியதாக காட்சியளிக்கவில்லை. இத்துடன் பெரிய டையர்கள் வழங்கப்பட இருக்கின்றன. 



எனினும், இது ஸ்டான்டர்டு மாடலில் வழங்கப்படாமல், ஏஎம்ஜி வெர்ஷனில் மட்டும் வழங்கப்படும் என தெரிகிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய எஸ் கிளாஸ் மாடல் அதிநவீன வடிவமைப்பு மற்றும் எதிர்கால அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது.

புதிய எஸ் கிளாஸ் மாடல் இரண்டு கதவுகள் கொண்ட கூப் அல்லது டிராப்-டாப் கன்வெர்டிபிள் ஆப்ஷன்களில் கிடைக்காது என கூறப்படுகிறது. இந்த மாடலின் இதர விவரங்கள் செப்டம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அறிமுக நிகழ்வின் போது தெரியும். 
Tags:    

Similar News