ஆட்டோமொபைல்

டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 ஏ.பி.எஸ். இந்தியாவில் அறிமுகம்

Published On 2019-03-01 10:19 GMT   |   Update On 2019-03-01 10:19 GMT
டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. #ApacheRTR160ABS #Motorcycle



டி.வி.எஸ். மோட்டார்ஸ் நிறுவனம் அபாச்சி ஆர்.டி.ஆர். 160 ஏ.பி.எஸ். மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய அபாச்சி ஆர்.டி.ஆர். 160 ஏ.பி.எஸ். துவக்க விலை ரூ.84,710 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மோட்டார்சைக்கிளில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஏ.பி.எஸ். மாடலின் விலை ஸ்டான்டர்டு வேரியண்ட்டை விட ரூ.6,000 வரை அதிகம் ஆகும். டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 பின்புறம் டிரம் பிரேக் மற்றும் பின்புற டிஸ்க் பிரேக் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் பின்புற டிரம் பிரேக் வேரியண்ட் விலை ரூ.84,710 என்றும் பின்புறம் டிஸ்க் பிரேக் மாடல் விலை ரூ.87,719 (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



ஏப்ரல் 1, 2019 வரை டி.வி.எஸ். மோட்டார்ஸ் ஏ.பி.எஸ். வசதியில்லாத மாடல்களின் விற்பனை நடைபெறும் என தெரிகிறது. அதன் பின் ஏ.பி.எஸ். இல்லாத மாடலின் விற்பனை நிறுத்தப்படும். ஏ.பி.எஸ். வசதி தவிர புதிய வெர்ஷனில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. 

டி.வி.எஸ். அபாச்சி ஆர்.டி.ஆர். 160 ஏ.பி.எஸ். மாடலில் 160சிசி ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 15 பி.ஹெச்.பி. பவர், 13 என்.எம். டார்க் மற்றும் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வருகிறது. அபாச்சி ஆர்.டி.ஆர். 160 மாடலின் பின்புறம் கியாஸ் ஷாக் மற்றும் முன்புறம் டெலிஸ்கோபிக் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளின் முன்புறம் 270 எம்.எம். பெட்டல் டிஸ்க், பின்புறம் 130 எம்.எம். டிரம் அல்லது 200 எம்.எம். டிஸ்க் பிரேக் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. முன்பக்க பிரேக்களில் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ். வசதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த மோட்டார்சைக்கிள் 17-இன்ச் அலாய் வீல், 90/90 R-17 மற்றும் 110/80 R-17 டையர்கள் முறையே முன்புறம் மற்றும் பின்புறம் வழங்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News