செய்திகள்
தஞ்சை ரெயில்நிலையம் முன்பு சத்துணவு ஊழியர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்த படம்.

சத்துணவு ஊழியர்கள் சாலை மறியல் - 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது

Published On 2019-11-27 18:05 GMT   |   Update On 2019-11-27 18:05 GMT
தஞ்சையில் சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் வீராச்சாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். துணைத்தலைவர்கள் மதியழகன், அறிவழகன், இணை செயலாளர்கள் கருணாநிதி, ஆரோக்கியமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ேபாராட்டத்தை அரசு ஊழியர் சங்க மாவட்ட ெசயலாளர் ெரங்கசாமி ெதாடங்கி ைவத்தார். மறியல் போராட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் பன்னீர்செல்வம், மாவட்ட துணைத்தலைவர் சசிகலா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

போராட்டத்தில் 25 குழந்தைகளுக்கு குறைவான சத்துணவு மையத்தை மூடுவதை கைவிட வேண்டும், ஒரே பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி சத்துணவு மையத்தை மூட கூடாது. காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடை ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷங்கள் எழுப்பினர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் சாந்தி, தர்மசுந்தரம், இணை செயலாளர்கள் பக்கிரிசாமி, ராமாமிர்தம், மாநில செயற்குழு உறுப்பினர் சுமதி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கோதண்டபாணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் சோமநாதராவ் நன்றி கூறினார். இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 95 பெண்கள் உள்பட 110 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News