செய்திகள்
ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாததால் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்

ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லாததால் ஆட்டோவில் சிகிச்சை பெறும் பெண்

Published On 2021-04-19 02:20 GMT   |   Update On 2021-04-19 02:20 GMT
கலபுரகி ஜிம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு கொரோனா பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும் அவலம் அரங்கேறி உள்ளது.
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை உருவாகி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், அரசு ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

கலபுரகி மாவட்டத்திலும் இதே நிலை நீடித்து வருகிறது. இந்த நிலையில் கலபுரகி டவுனை சேர்ந்த 55 வயது பெண் சளி, மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். இதையடுத்து அவரை கலபுரகி ஜிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். ஆனால் அந்த ஆஸ்பத்திரியில் படுக்கை இல்லை என்று டாக்டர்கள் கூறிவிட்டனர். அதுபோல் மற்ற அரசு ஆஸ்பத்திரிகளிலும் படுக்கை இல்லை என்று கூறிவிட்டனர்.

இதனால் கலபுரகி ஜிம்ஸ் ஆஸ்பத்திரி முன்பு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஒரு ஆட்டோவில் வைத்து ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் செயற்கை சுவாச கருவி பொருத்திய நிலையில் குடும்பத்தினர் சிகிச்சை அளித்து வரும் அவலம் அரங்கேறி உள்ளது. இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News