ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டார் 650

தயாரிப்பில் புதிய மைல்கல் கடந்த ராயல் என்ஃபீல்டு

Published On 2019-10-29 09:08 GMT   |   Update On 2019-10-29 09:08 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவத்தின் 650 ட்வின் மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் புதிய மைல்கல் கடந்துள்ளதாக அறிவித்துள்ளது.



ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள்கள் தயாரிப்பில் 24,500 யூனிட்களை கடந்துள்ளன. இத்தனை யூனிட்களை தயாரிக்க அந்நிறுவனம் ஆறு மாதங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது.

பேரலெல் ட்வின் சிலிண்டர் என்ஜின் கொண்ட இரு மோட்டார்சைக்கிள்களின் விலையே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. கடந்த மாதம் மட்டும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 3,993 யூனிட்களை தாயாரித்தது. இவற்றில் 2,137 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.



மீதமுள்ள 1856 யூனிட்கள் உள்ளூர் சந்தையில் விற்பனை செய்யப்பட்டன. சமீப மாதங்களில் 650 ட்வின் மாடல்களுக்கான ஏற்றுமதி 53.52 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது. அந்த வகையில் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மாடல்களுக்கு வெளிநாட்டிலும் மோகம் அதிகரித்து வருவதை உணர்த்துகிறது.

உள்நாட்டு விற்பனையை பொருத்தவரை 650 ட்வின் மாடல்களின் ஒட்டுமொத்த விற்பனை சரிவை சந்தித்து இருக்கிறது. ஆகஸ்ட் 2019 இல் ராயல் என்ஃபீல்டு மொத்தம் 4,571 யூனிட்களை தயாரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 578 யூனிட்கள் அதிகம் ஆகும்.

இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜி.டி. 650 மோட்டார்சைக்கிள் மாடல்களின் விலை ரூ. 2.51 லட்சம் மற்றும் ரூ. 2.71 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News