உள்ளூர் செய்திகள்
திருவள்ளுவர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகள் தேர்வு எழுதிய காட்சி.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது

Published On 2022-05-06 10:07 GMT   |   Update On 2022-05-06 10:07 GMT
புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 802 பேர் தேர்வு எழுதினர்.
புதுச்சேரி:

புதுவையில் 2 ஆண்டுக்கு பிறகு பத்தாம்வகுப்பு, பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு தொட ங்கியது.  புதுவை, காரைக்கால் பிராந்தியங்களில் 8 ஆயிரத்து 530 மாணவர்கள், 8 ஆயிரத்து 272 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 802 பேர் தேர்வு  எழுதினர். 

பள்ளி மாணவர்களுக்கு 48 மையங்கள், தனி தேர்வர்களுக்கு 3 மையங்கள் என மொத்தம் 51 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.  முறைகேடுகளை தடுக்க 9 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

வினா, மற்றும் விடைத்தாள் கொண்டு செல்ல 15 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பிளஸ்-1 மாணவர்களுக்கு வரும் 10-ந் தேதி பொதுத்தேர்வுகள் தொடங்குகிறது.
Tags:    

Similar News