ஆன்மிகம்
கும்பாபிஷேகம்

நீலந்தாங்கல் முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-12-02 03:46 GMT   |   Update On 2020-12-02 03:46 GMT
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் நீலந்தாங்கல் கிராமத்தில் உள்ள மகா முத்துமாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதனையொட்டி கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாகசாலையில் விக்னேஷ்வர பூஜையுடன் விழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுமங்கலி பூஜை, தம்பதிகள் பூஜை, முதல்கால யாகசாலைபூஜை ஆகியவை நடந்தது. காலை 6 மணியளவில் 2-ம் கால பூஜைகளும், கடம் புறப்பாடும் அதனைத்தொடர்ந்து கோவில் கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

இதையடுத்து அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம். சிறப்பு வழிபாடும் நடந்தது.

கும்பாபிஷேக விழாவில், ஒன்றிய ஆணையாளர் பழனி, வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவன் மற்றும் சுற்றியுள்ள ஊர்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டன. விழாவிற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கதலைவர் நீலந்தாங்கல் எம்.சுகுமார், ஒன்றிய கவுன்சிலர் அனுராதா, கோவில் தர்மகர்த்தா ரங்கசாமி, ஊராட்சி மன்ற தலைவர் மா.மணி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News