தொழில்நுட்பம்
ஸ்மார்ட்போன்

சர்வதேச அளவில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்தது - ஆய்வில் தகவல்

Published On 2020-03-30 05:42 GMT   |   Update On 2020-03-30 05:48 GMT
சர்வதேச சந்தையில் ஸ்மார்ட்போன் விற்பனை பிப்பவரி மாத வாக்கில் சுமார் 38 சதவீதம் குறைந்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சர்வதேச அளவில், பிப்ரவரி மாதத்தில் ஸ்மார்ட்போன் விற்பனை 38 சதவீதம் குறைந்துள்ளது என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாதத்தில், உலகில் மொத்தம் 6.18 கோடி ஸ்மார்ட்போன்கள் விற்பனை ஆகி இருக்கிறது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனை 9.92 கோடியாக இருந்தது. கொரோனா வைரஸ் உலக வியாபாரத்தை உலுக்கியதே இதற்கு முக்கிய காரணம் என கவுன்டர்பாயின்ட் ரிசர்ச் நிறுவனம் கூறுகிறது.



சர்வதேச அளவில் சாம்சங், சியோமி, விவோ, ஒப்போ, ஹானர், உள்ளிட்ட வேறு பல முன்னணி நிறுவனத்தின் பிராண்டுகள் ஆன்லைனில் தமது விற்பனையை விரிவுபடுத்தி வருகின்றன. 2022-ல் ஸ்மார்ட்போன்களில் டேட்டா பயன்பாடு மாதம் ஒன்றுக்கு சராசரியாக (3.5 ஜிகாபைட்டில் இருந்து) 17.5 ஜிகாபைட்டாக அதிகரிக்கும் என சிஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் நடப்பு 2020-ம் ஆண்டின் இடைப்பகுதியில் வணிகரீதியில் 5ஜி சேவை தொடங்கி விடும் என இத்துறையைச் சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். அடுத்த 6 ஆண்டுகளில் (2025-ஆம் ஆண்டுக்குள்) தொடர் பயன்பாட்டில் 92 கோடி செல்போன் இணைப்புகள் இருக்கும் என்றும், அதில் 8.8 கோடி 5ஜி இணைப்புகள் இருக்கும் என்றும் செல்போன் சேவை நிறுவனங்களின் சங்கம் (ஜி.எஸ்.எம்.ஏ) மதிப்பீடு செய்து இருக்கிறது.
Tags:    

Similar News