உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

வட்டி சலுகையுடன் வேளாண் வணிக கடன் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்

Published On 2022-05-06 05:41 GMT   |   Update On 2022-05-06 05:41 GMT
22 பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். கடன் மீதான வட்டியில் 3 சதவீத சலுகையுடன் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பூர்:

தமிழக அரசின் வேளாண் வணிகத்துறை விவசாயிகள் வாழ்க்கை மேம்பாட்டுக்கான கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. வேளாண் உள்கட்டமைப்பு நிதியில், அறுவடைக்கு பின்செய் மேலாண்மைக்கான கட்டமைப்புகள் மற்றும் சமுதாய வேளாண் கட்டமைப்புகளை நிரந்தரமாக அமைக்க நிதி உதவி வழங்கப்படுகிறது.

22 பொது மற்றும் தனியார் வங்கிகள் மூலம் கடன் வழங்கப்படும். கடன் மீதான வட்டியில் 3 சதவீத சலுகையுடன் 2 கோடி ரூபாய் வரை கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் தனிநபர், குழுக்கள், மத்திய மற்றும் மாநில அரசு அமைப்புகள் பயன்பெறலாம். விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இணையதளத்தில் பதிவு செய்யலாம் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து திருப்பூர் வேளாண்வணிகத்துறை அதிகாரிகள் கூறுகையில், திட்டத்தில் பயன்பெற விரிவான திட்ட அறிக்கையுடன், agrinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். 

உணவு பொருள் பதப்படுத்தும் நிலையங்கள், சிப்பம் கட்டும் அறை, சேமிப்பு கிடங்கு, மதிப்பீட்டு அலகு, குளிர்பதன சங்கிலி, பழுக்க வைக்கும் கூடங்கள், தரம் பிரிக்கும் அலகுகள், தளவாட வசதிகளை உருவாக்க இத்திட்டத்தில் வங்கிக்கடன் பெற்று பயன்பெறலாம் என்றனர்.
Tags:    

Similar News