பொது மருத்துவம்
புற்றுநோய் பற்றிய பயம்

புற்றுநோய் பற்றிய பயம்

Published On 2021-12-10 04:20 GMT   |   Update On 2021-12-10 04:20 GMT
பாம்பு என்ற சொல்லுக்கு எப்படி நாம் அளவுக்கு அதிகமாக பயப்படுகிறோமோ, அதேபோல் புற்றுநோய் என்ற வார்த்தைக்கும் அதிகமாக பயப்படுகிறோம்.
பாம்பை போன்று மனிதனை பயமுறுத்தும் மற்றொரு சொல் எதுவென்றால் புற்றுநோய்.

இந்த நோய் மிகவும் கொடியதாக நினைக்கிறோம். உண்மையில் புற்றுநோய் அத்தனை கொடியதா என்றால், பதில் இல்லை என்றுதான் வருகிறது. நமது நாட்டில் ஒரு லட்சம் பேரில் 450 பேர் மாரடைப்பால் ஒரு வருடத்தில் இறந்து போகிறார்கள். அதேவேளையில் ஒரு லட்சம் மக்கள்தொகையில் புற்றுநோயால் இறப்பவர்கள் எண்ணிக்கை வெறும் 120 மட்டுமே.

இதில் 30 பேர் தொடர்ந்து புகையிலை, புகைக்கும் பழக்கத்தால் தாங்களாகவே புற்றுநோயை வரவழைத்துக் கொள்கிறார்கள், ஆனால், புற்றுநோயைவிட மாரடைப்பால் இறப்பவர்களே அதிகம்.

புற்றுநோயை குணப்படுத்த நவீன மருத்துவ சிகிச்சைகள் வந்துவிட்டன. எலும்புருக்கி, ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, இதய நோய் போன்றவை பரம்பரையாக வரும் நோய்கள். ஆனால், புற்றுநோய் பரம்பரை நோயல்ல.

மலேரியா, வாந்தி பேதி, அம்மை, எலும்புருக்கி போன்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவும் நோயுமல்ல.

இருந்தாலும் பாம்பு என்ற சொல்லுக்கு எப்படி நாம் அளவுக்கு அதிகமாக பயப்படுகிறோமோ, அதேபோல் புற்றுநோய் என்ற வார்த்தைக்கும் அதிகமாக பயப்படுகிறோம். எனவே இந்த நோய் பற்றி தேவையற்ற பயம் வேண்டாம் என்கிறார்கள், மருத்துவ நிபுணர்கள்.
Tags:    

Similar News