ஆட்டோமொபைல்
மஹிந்திரா டியுவி300

இணையத்தில் லீக் ஆன மஹிந்திரா டியுவி300 பிஎஸ்6 ஸ்பை படங்கள்

Published On 2020-09-13 04:15 GMT   |   Update On 2020-09-12 11:40 GMT
மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 பிஎஸ்6 மாடல் ஸ்பை படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.


மஹிந்திரா நிறுவனத்தின் டியுவி300 மாடல் பிஎஸ்6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட இருக்கிறது. புதிய பிஎஸ்6 டியுவி300 மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டு இருந்தது. எனினும், கொரோனாவைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு தாமதமாகி உள்ளது.

தற்போதைய தகவல்களின் படி மஹிந்திரா டியுவி300 மாடல் இந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியீட்டிற்கு முன் இந்த மாடல் பூனேவில் சோதனை செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் வெளியாகி உள்ளது.



புதிய ஸ்பை படங்களில் டியுவி300 பிஎஸ்6 மாடல் முழுமையாக மறைக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இந்த காரில் புதிய முன்புறம் கொண்டிருக்கிறது. அதன்படி இதில் புதிய ஹெட்லேம்ப், டிஆர்எல்கள், மேம்பட்ட கிரில், புதிய பம்ப்பர், ஃபாக் லேம்ப் ஹவுசிங் மற்றும் புது வடிவமைப்பு கொண்ட டெயில் லேம்ப் வழங்கப்படுகிறது.

இதன் உள்புறத்தில் பிரீமியம் கேபின், மேம்பட்ட தொடுதிரை வசதி கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் மென்மையான சாஃப்ட் டச் பிளாஸ்டிக் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News