தொழில்நுட்பம்
ஆப்பிள் ஒன்

குறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறை அறிமுகம்

Published On 2020-09-15 18:58 GMT   |   Update On 2020-09-15 18:58 GMT
ஆப்பிள் நிறுவனம் குறைந்த விலையில் ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது.


ஆப்பிள் நிறுவனம் தனது டைம் ஃபிளைஸ் நிகழ்வில் புதிய வாட்ச் சீரிஸ் 6 மற்றும் புதிய ஐபேட் மாடல்களுடன் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் ஒன் சந்தா முறையை அறிமுகம் செய்து இருக்கிறது. இது ஆப்பிள் சேவைகளை ஒன்றிணைத்து ஒரே சந்தா விலையில் வழங்குகிறது.

அதன்படி ஆப்பிள் ஒன் சேவை ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 50ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை ஒரே கட்டணத்தில் வழங்குகிறது. இதற்கான மாத சந்தா இந்திய மதிப்பில் ரூ. 195 ஆகும்.



இதே போன்று குடும்பத்தினருக்கான சேவையில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 200ஜிபி ஐகிளவுட் மற்றும் ஆப்பிள் ஆர்கேட் போன்ற சேவைகளை மாதம் ரூ. 365 கட்டணத்தில் வழங்குகிறது. இந்த சந்தாவை அதிகபட்சம் குடும்பத்தினரில் ஆறு பேர் பயன்படுத்தலாம்.

இத்துடன் பிரீமியர் சந்தாவில் ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ், 2டிபி ஐகிளவுட் ஸ்டோரேஜ், ஆப்பிள் ஆர்கேட், ஆப்பிள் நியூஸ் பிளஸ், ஆப்பிள் ஃபிட்னஸ் பிளஸ் போன்ற சேவைகளை பெற முடியும்.
Tags:    

Similar News