செய்திகள்
அலி கான்

ஐ.பி.எல். போட்டியில் முதல் முறையாக விளையாடும் அமெரிக்க வீரர்

Published On 2020-09-13 10:11 GMT   |   Update On 2020-09-13 10:11 GMT
ஐ.பி.எல். வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு வீரர் 13-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாட உள்ளார்.

துபாய்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அந்த வீரரின் பெயர் அலி கான். வேகபந்து வீச்சாளரான அவர் இங்கிலாந்தை சேர்ந்த கேரி குர்னேவுக்கு பதிலாக சேர்க்கப்பட உள்ளார்.

குர்னே தோள்பட்டை காயத்தால் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக 29 வயதான முகமது ஹசன் அலிகான் சேர்க்கப்பட உள்ளார். ஐ.பி.எல். நிர்வாகத்தின் அனுமதிக்காக கொல்கத்தா அணி காத்திருக்கிறது.

ஐ.பி.எல். நிர்வாகம் அலிகானுக்கு அனுமதி அளித்தால் ஐ.பி.எல்.லில் விளையாட உள்ள முதல் அமெரிக்க வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.

அலிகான் இந்த சீசனில் கரீபியன் லீக் 20 ஓவர் தொடரில் போலார்ட் கேப்டனாக இருந்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஆடினார். இந்த தொடரில் அவர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். யார்க்கர் பந்து வீசுவதில் தேர்ச்சி பெற்றவர் ஆவார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் 23-ந் தேதி மும்பையை சந்திக்கிறது.

கடந்த ஐ.பி.எல். தொடரின் போதே கொல்கத்தா அணி நிர்வாகம் அலிகானை எடுக்க முயன்று முடியவில்லை. அப்போது அவர் கனடா 20 ஓவர் போட்டிகளில் சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இதைத் தொடர்ந்து அலிகானின் திறமையை கண்ட வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அவரை கரீபியன் லீக் தொடரில் அறிமுகப்பத்தினார்.

கடந்த சீசனில் அவர் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியில் இடம்பெற்று 12 விக் கெட்டுகளை வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News