செய்திகள்
கோப்புப்படம்

மதுரையில் புதிதாக 76 பேருக்கு நோய் தொற்று : கொரோனாவுக்கு 2 பேர் பலி

Published On 2020-10-17 23:30 GMT   |   Update On 2020-10-17 23:30 GMT
மதுரையில் நேற்று கொரோனாவுக்கு 2 பேர் பலியாகினர். புதிதாக 76 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மதுரை:

மதுரையில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருகிறது. தினமும் 100-க்கும் குறைவான நபர்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் கொரோனா பாதிப்புடன் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 65 வயது மூதாட்டி, 55 வயது ஆண் ஆகியோர் இறந்து போனார்கள். அவர்களுக்கு கொரோனா பாதிப்புடன் வேறு சில நோய்களும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். இவர்களை சேர்த்து மதுரையில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 404 ஆக உயர்ந்துள்ளது.

இதுபோல், மதுரையில் நேற்று புதிதாக 76 பேருக்கு நோய் தொற்று இருப்பது தெரியவந்தது. அவர்கள் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் பெரும்பாலான நபர்கள் நகர் பகுதியை சேர்ந்தவர்கள்.

நகர் பகுதியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா பரிசோதனை மேற்கொள்வதால் நகர் பகுதியில் தினமும் ஏராளமான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்படுகிறது.

நேற்றுடன் சேர்த்து மதுரையில் இதுவரை 17 ஆயிரத்து 943 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 16 ஆயிரத்து 752 பேர் குணம் அடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நேற்றும் 84 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இவர்களை தவிர 787 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.
Tags:    

Similar News