வழிபாடு
சங்காபிஷேக விழா

வேடசந்தூர் காசிவிஸ்வநாதர் கோவிலில் 108 சங்காபிஷேக விழா

Published On 2021-12-07 04:18 GMT   |   Update On 2021-12-07 04:18 GMT
வேடசந்தூர் கடைவீதியில் உள்ள பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி கோவிலில் கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது.
வேடசந்தூர் கடைவீதியில் பழமை வாய்ந்த காசிவிஸ்வநாதர்-விசாலாட்சி கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை சோமவாரத்தையொட்டி 108 சங்காபிஷேக விழா நடந்தது.

மேலும் மூலவர் காசிவிஸ்வநாதர்-விசாலாட்சிக்கு காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

இதேபோல் பால், தயிர், இளநீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. விழாவையொட்டி லிங்க வடிவில் பூக்களால் 108 சங்காபிஷேகம் வடிவமைக்கப்பட்டது. அதற்கு, நடராஜ குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையொட்டி 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி நடராஜர் வடிவில் அலங்கரிக்கப்பட்டு அதற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதைத்தொடர்ந்து 108 சங்குகளில் உள்ள புனித நீர் மற்றும் சந்தனம், தேன், திருநீர் உட்பட 16 வகையான பொருட்களால் ஜோதிலிங்கேஸ்வரருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஜோதிலிங்கேஸ்வரரை, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News