ஆட்டோமொபைல்
ஆடி கியூ8

ஆடி நிறுவனத்தின் ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. கார் பிரீமியம் விலையில் அறிமுகம்

Published On 2020-01-17 09:56 GMT   |   Update On 2020-01-17 09:56 GMT
ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. காரை பிரீமியம் விலையில் அறிமுகம் செய்திருக்கிறது.



ஆடி நிறுவனம் இந்திய சந்தையில் கியூ8 ஃபிளாக்‌ஷிப் எஸ்.யு.வி. காரை அறிமுகம் செய்துள்ளது. புதிய ஆடி கியூ8 விலை ரூ. 1.33 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார் ஒற்றை வேரியண்ட்டில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

ஆடி கியூ8 காரின் முன்புற கிரில் இருபுறங்களிலும் மெல்லியதாக இருக்கும் முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்களும், மேட்ரிக்ஸ் எல்.இ.டி. யூனிட்கள் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. பக்கவாட்டில் ஸ்லோப்பிங் ரூஃப்லைன், பெரிய வீல் ஆர்ச்கள், 21 இன்ச் அலாய் வீல்கள் வழங்கப்படுகின்றன. 

காரின் பின்புறம் எல்.இ.டி. டெயில் லைட்கள், டூயல் எக்சாஸ்ட் டிப்கள் வழங்கப்படுகின்றன. இவை ஒட்டுமொத்தமாக காருக்கு ஸ்போர்ட் தோற்றத்தை வழங்குகின்றன. அளவில் புதிய ஆடி கியூ8 மாடல் பி.எம்.டபுள்யூ. எக்ஸ்7 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி.எல்.எஸ். மாடல்களை விட சிறியதாக இருக்கின்றன.



உள்புறம் மூன்று டிஜிட்டல் டிஸ்ப்ளேக்கள்: 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 10.1 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8.6 இன்ச் கிளைமேட் கண்ட்ரோல் செட்டிங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இத்துடன் 4-சோன் கிளைமேட் கண்ட்ரோல், கனெக்ட்டெட் தொழில்நுட்பம், ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, பானரோமிக் சன்ரூஃப், குரூயிஸ் கண்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. மேலும் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன், எட்டு ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., எலெக்டிரானிக்கலி ஸ்டேபிலிட்டி கண்ட்ரோல், லேன் டிபாச்சர் வார்னிங், 360 டிகிரி கேமரா வழங்கப்பட்டுள்ளன.

ஆடி கியூ8 மாடலில் பி.எஸ்.6 ரக 3.0 லிட்டர் TFSI யூனிட் மற்றும் 48 வோல்ட் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 340 பி.ஹெச்.பி. பவர், 500 என்.எம். டார்க், எட்டு ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் மணிக்கு அதிகபட்சம் 250 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல முடியும்.
Tags:    

Similar News