ஆட்டோமொபைல்
ஜாவா மோட்டார்சைக்கிள்

விற்பனையில் புது மைல்கல் கடந்த கிளாசிக் லெஜண்ட்ஸ்

Published On 2020-11-13 08:34 GMT   |   Update On 2020-11-13 08:34 GMT
கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் ஜாவா மாடல் விற்பனையில் புதிய மைல்கல் எட்டியுள்ளதாக தெரிவித்து இருக்கிறது.


கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனம் பண்டிகை காலக்கட்டத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் அதிக ஜாவா பெராக் மாடல்களை விநியோகம் செய்து இருந்தது. தற்சமயம் அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அதிகாரப்பூர்வ அறிக்கையில், 12 மாதங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிக மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்து இருக்கிறது.

ஜாவா மாடல்களுக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக புதிய மைல்கல் எட்டியுள்ளதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து இருக்கிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜாவா பிராண்டு  இந்திய சந்தையில் 2018 நவம்பர் மாத வாக்கில் அறிமுகமானது. 



அறிமுகமானது முதல் முன்பதிவில் ஜாவா மாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. முன்பதிவு துவங்கிய சில காலத்தில் இதனை டெலிவரி காலம் எட்டு முதல் பத்து மாதங்களாக அதிகரித்தது. வரவேற்புக்கு இணையாக உற்பத்தியை வேகப்படுத்த கிளாசிக் லெஜண்ட்ஸ் முயற்சித்து வருகிறது.

சமீபத்தில் இந்தியா மட்டுமின்றி நேபால் மற்றும் ஐரோப்பியா போன்ற சந்தைகளிலும் ஜாவா பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அங்கும் ஜாவா மாடல்களுக்கு பெரும் வரவேற்பு கிடைப்பதாக கிளாசிக் லெஜண்ட்ஸ் தெரிவித்து உள்ளது.
Tags:    

Similar News