அழகுக் குறிப்புகள்
பால் குளியல்

பால் குளியல் செய்வது எப்படி?

Published On 2022-04-26 08:21 GMT   |   Update On 2022-04-26 08:21 GMT
பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.
பால் குளியலுக்கு பாலை அதிகம் பயன்படுத்த வேண்டியதில்லை. குளிக்கும் நீரில் ஒன்றரை முதல் இரண்டு கப் பாலை கலந்தால் போதுமானது. பசும்பாலை பயன்படுத்துவது நல்ல பலனை தரும். பாலுடன் ரோஜா இதழ்கள், ஓட்ஸ், ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய் சிறிதளவு கலந்து கொள்ளலாம். பால் குளியல் மூலம் குழந்தைகளை குளிப்பாட்டுவது சிறந்தது.

மன அழுத்தம்: வெதுவெதுப்பான நீரில் பால் சேர்த்தும் குளியல் போடலாம். இது தசைகளை மட்டுமின்றி மனதையும் தளர்வடைய செய்ய உதவும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட வைக்கும். பால் குளியலுக்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துவது தலைவலி பிரச்சினையை போக்கவும் உதவும்.

மென்மையான முடி: பால் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படக் கூடியது. தலையில் சிறிது பாலை தடவி 20 நிமிடங்கள் ஊறவிடவும். பின்பு தலை முடியை குளிர்ந்த நீரில் கழுவி விடலாம். பாலில் இருக்கும் புரதங்கள் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

வயதான தோற்றம்: விரைவில் வயதான தோற்றத்தை எதிர்கொள்வதை எதிர்க்கும் பண்புகள் பாலில் இருப்பதாக அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் பாலில் சருமத்தை ஈரப்பதமாக்கும் தன்மை இருப்பதால் உள் மற்றும் வெளிப்புற சரும அடுக்கை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். வயதாகும் தோற்றத்தையும் தள்ளிப்போட வழிவகுக்கும்.
Tags:    

Similar News