உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

நூல் விலை உயர்வை கண்டித்து போராட்டம் - மாநில அளவில் நடத்த பின்னலாடை போராட்ட குழுவினர் திட்டம்

Published On 2022-05-05 05:34 GMT   |   Update On 2022-05-05 05:34 GMT
பின்னலாடை தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகின்றன.
திருப்பூர்:

பருத்தி பஞ்சுக்கு ஏற்பட்ட செயற்கை தட்டுப்பாட்டால் நூல் விலை அபரிமிதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஓராண்டாக நூல் விலை நிலையில்லாமல் இருப்பதால் பின்னலாடை தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பின்னலாடை தொழிலில், நிட்டிங், ரைசிங், காம்பாக்டிங், டையிங், பிரின்டிங், எம்பிராய்டரிங் என 55 தொழில் அமைப்புகள் இயங்கி வருகின்றன. பனியன் தொழில் என்பது, சங்கிலி தொடர் போன்ற தொடர்பில் இருப்பதால்  ஏதாவது ஓரிடத்தில் சிறு சுணக்கம் ஏற்பட்டாலும்ஒ ட்டுமொத்த தொழிலும் ஸ்தம்பிக்கும்.

இந்திய பருத்தி கழகம், பருத்தி பஞ்சு வர்த்தகத்தை வரன்முறை செய்யாததால் தொ டர்பில்லாத நிறுவனங்களில் லட்சக்கணக்கான பேல்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்தி பஞ்சு விலை அபரிமிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மத்திய அரசு அசாதாராண சூழலில்பனியன் தொழிலை பாதுகாக்க பருத்தி, நூல் ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும். பருத்தியை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குரல்கொடுக்க துவங்கிவிட்டனர்.

இதற்காக, பல்வேறு தொழில் அமைப்பினர் இணைந்து வருகிற 16-ந் முதல் தே21-ந்திதேதி வரை தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அமைப்பினர், பொதுமக்களின் ஆதரவை பெற்று பொது வேலைநிறுத்தமாக நடத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளனர்.

மாவட்ட அளவிலான போராட்டமாக இல்லாமல் தமிழகம் முழுவதும் உள்ள ஜவுளித்துறையினரை ஒருங்கிணைத்து மாநில அளவிலான போராட்டமாக நடத்தவும் முயற்சி துவங்கிவிட்டது.

இதுகுறித்து திருப்பூர் டீமா  சங்க தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:-

திருப்பூர் நகரின் வளர்ச்சி, பனியன் தொழிலையே நம்பியுள்ளது. பெட்டிக்கடை துவங்கி பெரிய வணிக வளாகங்கள் வரை பனியன் ஏற்றுமதி வர்த்தக வளர்ச்சியை சார்ந்தே உள்ளது. லாபம் குறைந்ததாலோ, நஷ்டம் ஏற்படுவதாலோ போராட்டம் நடத்தவில்லை. பனியன் தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராடுகிறோம்.

போராட்ட நோக்கத்தை விளக்கி மக்கள் ஆதரவு பெறப்படும். போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர்ஈ ரோடு, கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட பிற மாவட்ட ஜவுளித்துறையினரிடம் பேசி வருகின்றனர். வரும் 16-ந்தேதி தொடங்கும் போராட்டம் மாநிலம் தழுவிய போராட்டமாக நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நூல் விலை உயர்வு குறித்து ஆலோசிக்க  சைமா சங்கத்தின் அவசர மகாசபை கூட்டம் இன்று மாலை நடக்கிறது. இது குறித்து சைமா சங்க நிர்வாகம், உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அவசர மகாசபை கூட்டம், இன்று 5-ந்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது.

பஞ்சு இறக்குமதி வரி ரத்து செய்த பிறகும், நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த இயலவில்லை. பஞ்சு, நூல் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் மட்டுமே நிலைமை சீராகுமா என்பது குறித்து விவாதிக்க வேண்டும்.

பஞ்சு இறக்குமதி, பஞ்சு ஏற்றுமதிக்கான தடை கோரி மேற்கொண்ட நடவடிக்கை குறித்தும், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்ய வேண்டியுள்ளது. எனவே உறுப்பினர்கள் அவசர மகாசபை கூட்டத்தில் பங்கேற்று கருத்துக்களை தெரிவிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News