ஆட்டோமொபைல்
ஹீரோ எலெக்ட்ரிக்

ஊரடங்கு நிறைவுற்றதும் இது நடக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நம்பிக்கை

Published On 2020-05-04 11:24 GMT   |   Update On 2020-05-04 11:24 GMT
ஊரடங்கு நிறைவுற்றதும் இது நடக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.



முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கரம் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் நாட்டில் ஊரடங்கு நிறைவுற்றதும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க துவங்கி இருக்கும் நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று சரியான பின் உலகம் முழுக்க எலெக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் வாகன உள்கட்டமைப்பு வசதிகள் பலமடங்கு அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்திருக்கிறது.



2021 ஆம் ஆண்டு வாக்கில் எலெக்ட்ரிக் வாகன உள்கட்டமைப்பு சந்தை 41 லட்சம் யூனிட்களாக அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. இது வருடாந்திர அடிப்படையில் 22.1 சதவீத வளர்ச்சியை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கொரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் காற்று மாசு 60 சதவீதம் வரை சரிவடைந்து இருக்கிறது. இது போன்ற காரணங்களால் எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News