ஆட்டோமொபைல்
ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ்

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் வெளியானது

Published On 2019-09-14 09:22 GMT   |   Update On 2019-09-14 09:22 GMT
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் கிளாசிக் 350 எஸ் மோட்டார்சைக்கிளை வெளியிட்டுள்ளது. இதன் விலை மற்றும் அம்சங்களை பார்ப்போம்.



ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது கிளாசிக் 350 மோட்டார்சைக்கிளின் விலை குறைந்த மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் கிளாசிக் 350 எஸ் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ. 1.45 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக விலை குறைந்த மாடல் தமிழ் நாடு மற்றும் கேரளாவில் மட்டும் கிடைக்கிறது. விரைவில் நாடு முழுக்க விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிளாசிக் 350 எஸ் மோட்டார்சைக்கிள் பியூர் பிளாக் மற்றும் மெர்குரி சில்வர் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் பிளாக்-அவுட் பிட்களை கொண்டிருக்கிறது. புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் ஃபியூயல் டேன்க்கில் லோகோ இடம்பெற்றிருக்கிறது. டூயல் சேனல் ஏ.பி.எஸ். கொண்டிருக்கும் கிளாசிக் 350 விலை ரூ. 1.54 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது கிளாசிக் 350 எஸ் மாடலை விட ரூ. 9000 அதிகம் ஆகும்.



சமீபத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் புல்லட் 350 மற்றும் புல்லட் 350 இ.எஸ். மாடல்களின் விலை குறைந்த வெர்ஷன்களை அறிமுகம் செய்தது. விலை குறைந்த வெர்ஷன்கள் ராயல் என்ஃபீல்டு 350 எக்ஸ் மற்றும் புல்லட் 350 எக்ஸ் இ.எஸ். என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் விலை முறையே ரூ. 1.12 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், ரூ. 1.21 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 எஸ் மாடலிலும் 346 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 19.8 பி.ஹெச்.பி. பவர், 28 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இத்துடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டிருக்கிறது. இதே என்ஜின் புல்லட் 350 மாடல்களிலும் வழங்கப்பட்டிருக்கிறது.
Tags:    

Similar News