உள்ளூர் செய்திகள்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சிவராசு தலைமையில் நடைபெற்றது.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2022-05-06 10:04 GMT   |   Update On 2022-05-06 10:04 GMT
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
திருச்சி:

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள்முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்கதலைவர்கள், 

பிரதிநிதிகள் தலைவர்கள் கலந்துகொண்டு பேசினார்கள்.தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநில தலைவர் விஸ்வநாதன் பேசும்பொழுது உய்ய க்கொண்டான்,பெருவளை, அய்யன்  வாய்க்கால்,ஸ்ரீரங்கம் நாட்டு வாய்க்கால், 

பங்குனி வாய்க்கால்ஆகிய பாசன வாய்க்கால்களைஜூன் 5ஆம் தேதிக்குள் தூர்வார வேண்டும் புலிவலம் ஏறி புலிவலம் ஏறி ஏறி போன்றவற்றில் உள்ள கருவ முள் செடிகளை அகற்ற வேண்டும் நந்தி ஆற்றை தூர்வார வேண்டும் உழவர் மன்றம் நல்ல முறையில் செயல்படுகிறது என்று அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்று பேசினார்.


 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் அயிலை சிவசூரியன் பேசு ம்பொழுதுஉய்ய கொண்டான் தலைப்பு பகுதியான பெட்டவாய்த்தலை முதல் கோப்பு ஆற்று பாலம் வரை கொண்டான் இடது கரையில் படர்ந்து கிடக்கும் முள் செடிகொடிகளை அகற்ற வேண்டும் தலைப்பு முதல் புலிவலம் மணற்போக்கி வரை இடது கரையை தார் சாலையாக மாற்ற வேண்டும் என்று பேசினார். 

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் சின்னதுரை பேசும்பொழுதுதற்போது கோடை காலம் நடைபெற்று வருவதால் ஆறுகள் ஏரிகள் கண்மாய்கள் பாசன வடிகால் வாய்க்கால்கள் மழைநீர் வரத்து வாரிகள் போன்றவற்றை போர்க்கால அடிப்படையில் தூர்வாரி வருங்காலத்தில் கடைமடை பகுதிவரை தண்ணீர் தடையின்றி செல்ல வழிவகை செய்ய வேண்டும் மேலும் சென்ற ஆண்டைப் போன்று ஜூன் 12ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று பேசினார்.

Tags:    

Similar News