உள்ளூர் செய்திகள்
உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பண்ணை எந்திரங்களை வழங்கிய காட்சி.

தூத்துக்குடி மாவட்டத்தில் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 லட்சத்தில் பண்ணை எந்திரங்கள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

Published On 2022-04-17 07:26 GMT   |   Update On 2022-04-17 07:26 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ.75 லட்சத்தில் பண்ணை எந்திரங்களை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கூட்டுப்பண்ணைத் திட்டம் 2021-22-ம் ஆண்டில் ஒரு குழுவிற்கு 20 விவசாயிகளை உள்ளடக்கிய 75 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 15 உழவர் உற்பத்தியாளர்கள் குழுக்கள் ஏற்படுத்தப்-பட்டுள்ளன.  

இந்த உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு  குழு ஒன்றிற்கு ரூ.5 லட்சம் தொகுப்பு நிதியாக பண்ணை எந்திரங்கள் வாங்குவதற்காக வழங்கப்படுகிறது.  அதன்படி தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 15 உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ரூ. 75 லட்சம் மதிப்பில் பண்ணை எந்திரங்களை  அமைச்சர்  அனிதா  ராதாகிருஷ்ணன்  வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர்  செல்வகுமார், வேளாண்மை இணை இயக்குநர்  முகைதீன், வேளாண்மை துணை இயக்குநர்  ஜெயசெல்வின் இன்பராஜ், ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர்  இளையராஜா,    மற்றும் உமரிசங்கர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

திட்டத்தின்படி ஆழ்வார்திருநகரி வட்டாரத்தில் ராஜபதி கிராமத்தில் 5 உழவர் ஆர்வலர் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ஒரு உழவர் உற்பத்தியாளர்  குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 இக்குழுவிற்கு பண்ணை எந்திரங்கள் வாங்கிட தொகுப்பு நிதியாக ரூ.5 லட்சம் வழங்கப்பட்டு விசை உழவு எந்திரங்கள் 3 எண்ணம் ரூ.5.97 லட்சம் மதிப்பில் வாங்கப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News