செய்திகள்
கைது

மயிலாடுதுறையில் அடகு கடை உரிமையாளர் மீது தாக்குதல்- 3 பேர் கைது

Published On 2021-01-13 14:12 GMT   |   Update On 2021-01-13 14:12 GMT
மயிலாடுதுறையில் நகையை திருப்பி தர தாமதமானதால் அடகு கடை உரிமையாளரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மகாதான தெருவை சேர்ந்த கைலாஷ்சந்த் ஜெயின் மகன் சஞ்சய்குமார் (வயது42). இவர் மயிலாடுதுறை திருவிழுந்தூர் பகுதியில் நகை அடகு கடை நடத்தி வருகிறார். இவரிடம் மயிலாடுதுறை அருகே பல்லவராயன்பேட்டை சிவன்கோவில் தெற்குவீதியை சேர்ந்த ராமையன் மகன் சதீஷ் (36) என்பவர் 2 பவுன் நகையை அடமானம் வைத்து ரூ. 21 ஆயிரம் பெற்றுள்ளார்.

இவர் சம்பவத்தன்று வட்டியுடன் அடமான தொகை ரூ.30 ஆயிரத்தை அடகு கடைக்கு சென்று சஞ்சய்குமாரிடம் கொடுத்தார். அதனை பெற்றுக்கொண்ட சஞ்சய்குமார் நகை வங்கியில் உள்ளது, மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளும்படி தெரிவித்தார்.

அதன்படி மறுநாள் சதீஷ் அடகு கடைக்கு சென்று நகையை கேட்டுள்ளார். அப்போது அடமானம் வைத்த நகையை திருப்பி தர தாமதமானதால் ஆத்திரம் அடைந்த சதீஷ் தனது நண்பர்களை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து சஞ்சய்குமாரை தாக்கினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய்குமார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாதேவன் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் வழக்கு தொடர்பாக சதீஷ், இவரது நண்பர்கள் மயிலாடுதுறை தோப்பு தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் தினகரன் (29) , மயிலாடுதுறை மாயூரநாதர் கீழவீதியை சேர்ந்த குணசேகரன் மகன் சதீஷ்குமார் (32) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News