செய்திகள்
கோப்பு படங்கள்

சிஏஏ-வுக்கு பின்னர் சட்டவிரோத குடியேறிகள் வங்காளதேசத்திற்கு செல்வது அதிகரிப்பு - எல்லை பாதுகாப்பு படை அதிகாரி

Published On 2020-01-24 12:45 GMT   |   Update On 2020-01-24 12:45 GMT
குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு பின்னர் சட்டவிரோத குடியேறிகள் வங்காளதேசத்திற்குள் செல்வது அதிகரித்துள்ளதாக இந்திய எல்லை பாதுகாப்புப்படை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:

பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் 2019 டிசம்பர் 4-ம் தேதி மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது.

இந்த  சட்டம் ஜனவரி 10-ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைவழியாக அண்டை நாடான வங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்களை சுலபமாக கண்டறிந்து விடலாம். 



இந்நிலையில், குடியுரிமை சட்டத்திருத்தம் பாராளுமன்றத்தில் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டது முதல் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்கள் தங்கள் சொந்த நாடான வங்காளதேசத்திற்கு திரும்பிச்செல்வது அதிகரித்துள்ளதாக கொல்கத்தாவில் உள்ள இந்திய-வங்காளதேச எல்லை பாதுகாப்பு படையின் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஒய்.பி. ஹுரன்யா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், 'டிசம்பர் மாதம் முதல் சட்டவிரோத வங்காளதேச அகதிகள் மீண்டும் அவர்கள் நாட்டிற்கே செல்வது அதிகரித்துள்ளது. 

ஜனவரி மாதத்தில் மட்டும் இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 268 வங்காளதேசத்தினர் அவர்கள் நாட்டிற்கு தப்பிச்செல்ல முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்’ என அவர் தெரிவித்தார்.   
Tags:    

Similar News