செய்திகள்
கோப்பு படம்

ஒட்டன்சத்திரத்தில் லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலர் சிறையில் அடைப்பு

Published On 2019-09-21 13:12 GMT   |   Update On 2019-09-21 13:12 GMT
ஒட்டன்சத்திரத்தில் வீட்டு வரியை குறைத்து போட்டுத்தருவதாக கூறி லஞ்சம் வாங்கிய நகராட்சி அலுவலரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒட்டன்சத்திரம்:

ஒட்டன்சத்திரம் நகாணம்பட்டி, இருளக் குடும்பன் பட்டியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் புதிய வீட்டு வரி விதிப்பு செய்வதற்காக நகராட்சி வருவாய் உதவியாளர் கிருஷ்ணன் என்பவரை அணுகியுள்ளார். அதற்கு கிருஷ்ணன் வீட்டு வரியை குறைத்து போட்டுத்தருவதாகவும், அதற்காக தனக்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத ராமச்சந்திரன் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறையினரின் ஆலோசனையின் பேரில் அவர்கள் கொடுத்த ரசாயனம் தடவிய பணம் ரூ.6 ஆயிரத்தை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள டீ கடையில் வைத்துக் கொடுத்துள்ளார்.

அப்பொழுது மாற்று உடையில் இருந்த லஞ்சஒழிப்பு டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுந்தரராஜன் மற்றும் ராஜேஸ்வரி அடங்கிய குழுவினர் கிருஷ்ணனை கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரை செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News