தொழில்நுட்பச் செய்திகள்
ஆப்பிள் சாதனங்கள்

ஆப்பிள் கொண்டுவரவுள்ள புதிய அம்சங்கள்- வெளியான தகவல்

Published On 2022-04-12 06:04 GMT   |   Update On 2022-04-12 06:04 GMT
கடந்த இரண்டு வருடத்தில் நடந்தது போலவே இந்த வருட நிகழ்ச்சியும் ஆன்லைனில் நடைபெறவுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டுக்கான WWDC நிகழ்ச்சியை ஜூன் 6-ம் தேதி அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சி கடந்த இரண்டு வருடங்களில் நடந்தது போலவே ஆன்லைனில் நடைபெறவுள்ளது. 

இந்த நிகழ்ச்சியில் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 பற்றிய அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது. அதேசமயம் இந்த ஆண்டு ஆப்பிள் ஆரோக்கியம் சார்ந்த அம்சங்களை கொண்ட புதிய சாதனத்தையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆப்பிள் ஐஓஎஸ் 16 மற்றும் வாட்ச் ஓஎஸ்9 அப்டேட்டில் நோட்டிஃபிகேஷன், புதிய ஆரோக்கியத்தை அளவிடும் அம்சங்கள் ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது. 

அதேபோல மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட்டை இந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஆகுமெண்டட் ரியாலிட்டி மற்றும் விர்ட்சுவல் ரியாலிட்டி ஆகியவற்றை சப்போர்ட் செய்யும் மென்பொருட்களும் இதில் இடம்பெறவுள்ளன. 

இதனால் ஹெட்செட் மூலமே நாம் மெய்நிகர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அம்சம் இதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதலாக ஆப்பிள் புதிய மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மாடல்கள், அப்டேட் செய்யப்பட்ட மேக் மினி, 24 இன்ச் ஐமேக் ஆகியவற்றையும் இந்த வருடம் வெளியிடலாம் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Tags:    

Similar News