செய்திகள்
விபத்து நடைபெற்ற இடம்.

ரெயில் கேட்டில் லாரி மோதல்- சிக்னல் பழுதால் தேஜஸ் அதிவிரைவு ரெயில் தாமதம்

Published On 2020-12-02 07:50 GMT   |   Update On 2020-12-02 07:50 GMT
விருத்தாசலம் அருகே ரெயில் கேட்டில் லாரி மோதியதில் சிக்னலில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக தேஜஸ் அதிவிரைவு ரெயில் நடுவழியில் நின்றது.
விருத்தாசலம்:

மதுரையில் இருந்து சென்னை நோக்கி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை சென்று கொண்டிருந்தது. விருத்தாசலம் ஜங்‌ஷனுக்கு ரெயில் வருவதை அறிந்ததும் நாச்சியார் பேட்டை ரெயில்வே கேட் மூடப்பட்டது. அப்போது மினி லாரி வந்துகொண்டிருந்தது.

இந்த லாரியை விருத்தாசலம் அருகே தொட்டி குப்பத்தை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (வயது 25) ஓட்டினார். கண்ணிமைக்கும் நேரத்தில் மினி லாரி ரெயில்கேட் மீது மோதி உள்ளே புகுந்ததது. இதனால் ரெயில்வே கேட் சேதமடைந்ததுடன் சிக்னல் பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக விருத்தாச்சலம் ரெயில் நிலையத்தை கடந்த தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜங்‌ஷன் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் நின்றது. நீண்ட நேரம் ரெயில் நின்றதால் பயணிகள் என்னமோ? ஏதோ என்று தவித்தனர்.

இதுகுறித்து ரெயில்வே ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று சிக்னலை சரி செய்தனர். அதன்பின்னர் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

இது குறித்து அறிந்த விருத்தாசலம் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மினி லாரி பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News