செய்திகள்
கோப்புப்படம்

அவசரகால கையிருப்பில் இருந்து 50 லட்சம் கச்சா எண்ணெய் பேரல்களை ரிலீஸ் செய்யும் இந்தியா

Published On 2021-11-23 14:16 GMT   |   Update On 2021-11-23 14:16 GMT
இந்திய அரசு அவசரகால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் கச்சா எண்ணெய் கையிருப்பு வைத்துள்ளது.
ஒவ்வொரு நாட்டின் பொருளாதாரம், பணமதிப்பு ஆகியவற்றை நிர்ணயிப்பதில் கச்சா எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயரும்போது பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்கிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்படைவதுடன் விலைவாசி ஏற்றம் அடைகிறது. இது பொருளாதாரத்தில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, தங்கள் கையில் இருக்கும் இருப்புகளில் இருந்து குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் பேரல்களை வினியோகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் அமெரிக்கா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து கச்சா எண்ணெய் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக, ஐந்து மில்லியன் கச்சாய் எண்ணெய் பேரல்களை அவசர கால இருப்பில் இருந்து விடுவிக்க இருக்கிறது.

இந்தியா அவசர கால கையிருப்பாக மூன்று இடங்களில் 38 மில்லியன் பேரல்கள் (5.33 மில்லியன் டன்) கையிருப்பு வைத்துள்ளது.

‘‘திரவ ஹைட்ரோகார்பன்களின் விலை நியாயமானதாகவும், பொறுப்பானதாகவும் சந்தை சக்திகளால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா உறுதியாக நம்புகிறது’’ இந்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் செயற்கையாகவே தேவையை அதிகரித்து, விலையை உயர்த்துவது குறித்து இந்தியா தொடர்ந்து தனது கவலையை தெரிவித்து வருகிறது. இது எதிர்மறைவான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.



இந்த அறிக்கை அதிகாரிப்பூர்வமாக தேதியிட்டு வெளியாகவில்லை. இருந்தாலும் இன்னும் 10 நாட்களுக்குள் கச்சா எண்ணெய் பேரல்களை பயன்பாட்டுக்கு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் முடிவை நீட்டித்துள்ளது. இதனால் சவுதி அரேபியாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி ஆகும் அளவு குறைந்துள்ளது.

உலகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா 3-வது இட்தில் உள்ளது. சர்வதேச அளவில் தொடர் விலை ஏற்றத்தால் இந்தியா பாதிப்புள்ளாகியுள்ளது.
Tags:    

Similar News