செய்திகள்
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

திருவள்ளுவரின் காவி உடை படம்- எதிர்ப்பால் டுவிட்டரில் இருந்து நீக்கினார் வெங்கையாநாயுடு

Published On 2020-01-16 10:57 GMT   |   Update On 2020-01-16 10:57 GMT
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த படத்தை நீக்கினார்.

சென்னை:

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து பா.ஜனதா கட்சியினர் சில நாட்களுக்கு முன்பு படம் ஒன்றை வெளியிட்டனர். இது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருவள்ளுவரின் தோற்றம் காவி உடையுடன்தான் இருந்தது என்றும் அதனை தி.மு.க. ஆட்சியில் வெள்ளை அணிவித்து மாற்றி விட்டார்கள் என்றும் பா.ஜனதா வினர் கூறி வருகிறார்கள். இதற்கு தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்த நிலையில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டார். இதற்கு டுவிட்டரில் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து அந்த படத்தை வெங்கையா நாயுடு உடனடியாக நீக்கி விட்டு தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட வெள்ளை உடை அணிந்திருக்கும் திருவள்ளுவர் படத்தை பதிவிட்டார்.

இதற்கிடையே பா.ஜனதா கட்சியினர் மீண்டும் தங்களது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடையுடன் இருக்கும் படத்தை வெளியிட்டு இருக்கிறார்கள். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Tags:    

Similar News