உள்ளூர் செய்திகள்
ஒரத்தூரில் மருத்துவக்கல்லூரி திறப்பு விழா

நாகை செய்தி, மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பயன்பாட்டுக்கு வந்தது

Published On 2022-01-13 10:18 GMT   |   Update On 2022-01-13 10:18 GMT
ஒரத்தூரில் 60 ஏக்கரில் புதிய மருத்துவக்கல்லூரி பயன்பாட்டிற்கு வந்தது
நாகப்பட்டினம்:

கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி நாகை மாவட்டம் வேளாங்கண்ணிஅடுத்த ஒரத்தூர் கிராமத்தில் 366.85 கோடி ரூபாய் 
மதிப்பில், 60.4 ஏக்கர் பரப்பளவில் மருத்துவக்கல்லூரி 
மருத்துவமனை அடிக்கல் நாட்டப்பட்டது. 

மருத்துவமனை கட்டுமான பணி நடைபெற்று வரும் நிலையில், 
பணிகள் நிறைவடைந்த மருத்துவக்கல்லூரியை பிரதமர் 
மோடி காணொலி மூலம் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர் மெய்யநாதன், செல்வராசு எம்பி, 
நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ், மீன் வளர்ச்சி 
கழக தலைவர் கவுதமன், எம்.எல்.ஏ.க்கள் ஆளூர் 
முகமது ஷாநவாஸ், நாகை மாலி, எஸ்பி ஜவஹர், 
மருத்துவமனை முதல்வர் விஷ்வநாதன் மற்றும் பலர் சமூக 
இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர்.

இதில் மொத்தம் 22 கட்டிடங்கள், 3 துறைகள் முதற்கட்டமாக 
துவங்க உள்ளது. மேலும், மருந்தியல், சமூக மருத்துவத்துறை, 
நுண்ணுயிரியல் துறை, நோயியல் துறை, தடயவியல் மருத்துவ 
துறை, என பல்வேறு துறைகள் எதிர்காலத்தில் வர உள்ளது. மருத்துவகல்லூரியில் இந்த ஆண்டு முதல் மாணவர் 
சேர்க்கை தொடங்க உள்ளது. 

40 கணினிகளை கொண்ட இணையநூலம், புத்தக நூலகம், 
தேர்வறை, செய்முறை ஆய்வகம், என நவீன பிரத்யேக 
ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News