செய்திகள்
புரெவி புயல்

பாம்பன் அருகே புரெவி புயல்: 3 மணி நேரத்தில் கடக்கிறது

Published On 2020-12-03 11:34 GMT   |   Update On 2020-12-03 11:34 GMT
திருகோணமலைக்கு வடக்கே கரையை கடந்த புரெவி புயல், பாம்பன் அருகே நகர்ந்து வருகிறது. 3 மணி நேரத்தில் பாம்பன் பகுதியை கடக்கிறது.
வங்கக்கடலில் உருவான புரெவி புயல் இலங்கை திருகோணமலைக்கு வடக்கே நேற்றிரவு கரையை கடந்தது. அந்த புயல் பாம்பன் நோக்கி நகர்ந்தது. தற்போது பாம்பன் அருகே வந்துள்ளது. இன்னும் 3 மணி நேரத்தில் பாம்பனை கடக்க இருக்கிறது. அதன்பின் பாம்பன் - கன்னியாகுமாரி இடையே இன்று நள்ளிரவு அல்லது அதிகாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புரெவி புயல் பாம்பனில் இருந்து கிழக்கு-தென்கிழக்கில் 40 கி.மீட்டர் தூரத்தில் நிலைகொண்டுள்ளதாகவும், கன்னியாகுமரிக்கு கிழக்கே- வடகிழக்கே 260 கி.மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று மாலை பாம்பன் பகுதிக்கு மேற்குப்பகுதியில் அருகில் வந்து, அதன்பின் மேற்கு-தென்மேற்கு நோக்கி நகரும் எனத் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News