செய்திகள்
கொரோனா வைரஸ்

சென்னையில் கொரோனா தொற்று பரவிய தெருக்கள் 871 ஆக உயர்வு

Published On 2021-09-25 08:30 GMT   |   Update On 2021-09-25 08:30 GMT
தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 134, கோடம்பாக்கத்தில் 91, அடையாறில் 80, அம்பத்தூரில் 60 தெருக்களிலும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று 205 பேருக்கு தொற்று பரவியது. இதையடுத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு 864 தெருக்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்தன. அது தற்போது 871 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் 39,597 தெருக்கள் உள்ளன. இதில் 38,666 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. 801 தெருக்களில் மட்டுமே பாதிப்பு தற்போது உள்ளது.

இதில் 3 பேருக்கு குறைவாக பாதிக்கப்பட்ட தெருக்களாக 758-ம், 3 பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட தெருக்களாக 113-ம், 4 பேருக்கு மேல் பாதிக்கப்பட்ட தெருக்களாக 57-ம், 5 பேருக்கு அதிகமாக பாதிக்கப்பட்ட தெருக்களாக 21-ம் உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

மணலி, தண்டையார்பேட்டை, திரு.வி.க.நகர், அம்பத்தூர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் 5 பேருக்கு மேல் பாதித்த தெருக்கள் இல்லை.

தேனாம்பேட்டையில் அதிகபட்சமாக 134 தெருக்களும், கோடம்பாக்கத்தில் 91, அடையாறில் 80, அம்பத்தூரில் 60, மாதவரத்தில் 55, சோழிங்கநல்லூரில் 50, ராயபுரம் 54, தண்டையார் பேட்டை 51 தெருக்களில் என தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News