செய்திகள்
கோப்புபடம்.

உடுமலை பகுதியில் மானாவாரி சாகுபடி பணிகள் தீவிரம்

Published On 2021-10-10 07:28 GMT   |   Update On 2021-10-10 07:28 GMT
சமீபத்தில் பெய்த மழைக்கு பிறகு உழவு செய்தல், களைக்கொல்லி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உடுமலை:

உடுமலை பகுதியில் வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழையை ஆதாரமாக கொண்டு மானாவாரி சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. 

அதிகபட்சமாக வடகிழக்கு பருவமழை காலத்தில் பல ஆயிரம் ஏக்கரில்  கொண்டைக்கடலை, கொத்தமல்லி, நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம் மற்றும் தானியப்பயிர்கள் பயிரிடப்படுகின்றன. இந்தாண்டும் மானாவாரி சாகுபடிக்காக  பணிகளை விவசாயிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். 

சமீபத்தில் பெய்த மழைக்கு பிறகு உழவு செய்தல், களைக்கொல்லி தெளித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

மானாவாரி சாகுபடியில் வடகிழக்கு பருவமழை சீசன் முக்கியமானதாகும். 

சோளம்  உள்ளிட்ட பயிர்களை கால்நடைகளுக்கு உலர் தீவனமாக பயன்படுத்தலாம். எனவே விதைப்பிற்கு தேவையான பணிகளை முன்னதாக தொடங்கி உள்ளோம். தானிய சாகுபடிக்கு தேவையான விதை உட்பட இடுபொருட்களை வேளாண்துறை வாயிலாக வினியோகித்தால் பயனுள்ளதாக இருக்கும் என்றனர்.  
Tags:    

Similar News